திங்கள், அக்டோபர் 11, 2010

நாடுகாண் பயணம் - அமெரிக்கன் சமோவா


நாட்டின் பெயர்:
அமெரிக்கன் சமோவா 

இந்நாடு அமெரிக்காவால் நேரடியாக ஆளப்படாத, ஆனால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள நாடு.

அமைவிடம்: 
ஓசியானியா (அவுஸ்திரேலியக் கடற்பரப்பு)


நாட்டு எல்லைகள்: 
சுற்றிவர பசுபிக் சமுத்திரத்தால் சூழப்பட்ட தீவு.

தலைநகர்: 
பாகோ பாகோ 

அயல் நாடுகள்:
டொங்கா, தகிட்டி, கிரிபாதி, பிஜி.

நாட்டு மொழிகள்: 
ஆங்கிலம், மற்றும் சமோவன்.

சனத்தொகை: 
65, 628 (2009 ஆம் ஆண்டுக் கணக்கு)
சமயம்:
கிறீஸ்தவம், இயற்கைச்சமயம், சிறிய அளவில் புத்தசமயம் மற்றும் பஹாய். 

நாட்டின் பரப்பளவு:
199 சதுர கிலோமீட்டர்கள்.

நாட்டின் தலைவர்: 
பராக் ஒபாமா 

மேதகு ஆளுநர்: 
டோகியோலா துலபோனோ 

இராணுவ ஆளுநர்: 
இபுலாசி ஐடோபெலி சுனியா 

நாணயம்: 
அமெரிக்க டொலர் 

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-684 

ஏற்றுமதிப் பொருட்கள்:
மீன், வாழைப்பழம், தேங்காய், காய்கறிகள், பழங்கள், சிறிய அளவில் பாலுணவுகள், மற்றும் கைவினைப் பொருட்கள்.

கனிய வளங்கள்:
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் ஏதுமில்லை.

சரித்திரக் குறிப்பு:
கடந்த 2009 செப்டெம்பரில் இத்தீவில் ஏற்பட்ட 'சுனாமியால்' 150 பேர் கொல்லப் பட்டனர்.
முன்பொரு காலத்தில் இத்தீவில் வாழ்ந்தவர்கள், ஏனைய பசிபிக் தீவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது தீவின் சில பகுதிகள் ஜெர்மன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஜெர்மன் கடற்படையைத் தாக்க வந்த 3 அமெரிக்கக் கப்பல்களும், ஜேர்மனியின் 3 கப்பல்களும் புயலினால் தாக்கப்பட்டுக் கடலில் மூழ்கின.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக