ஞாயிறு, நவம்பர் 28, 2010

வாசகர் கருத்து

கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான 'எந்தக் குழந்தையும்' என்ற கட்டுரைத் தொடரில் இடம்பெற்ற கவிஞர் 'புலமைப் பித்தன்' அவர்களின் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினை" என்ற பாடலை அண்மையில் வாசித்த வாசகரின் கருத்து.

எந்தக் குழந்தையும் 
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்" பாடலுடன் எனக்குப் பூரண திருப்தியில்லை, காரணம்: அப்பாடலில் "நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்று தாயின்மீது மட்டுமே பழிசுமத்தப் படுகிறது. இன்றைய நவீன உலகத்தில் குழந்தை வளர்ப்பில் தாய், தந்தை இருவருடைய பங்களிப்பும் அவசியம் என்பதை ஒரு தற்காலிக எஸ்.எவ்.ஓ.(S.F.O) தலைவராகவும், பல வருடங்களாகக் குழந்தைகளுடன் பணிபுரிந்த அனுபவத்தை வைத்தும் கூற விரும்புகிறேன்.
அன்புடன் 
வாசகன் க.ந.

ஆசிரியர் குறிப்பு 
வாசகர் க.ந. அவர்களின் கருத்துக்கு நன்றி.
டென்மார்க் தவிர்ந்த ஏனைய நாட்டு வாசகர்களின் கவனத்திற்கு:- S.F.O என்பது டேனிஷ் மொழியில் Skole Fritids Ordning என்ற வார்த்தைகளின் சுருக்கமாகும். SFO என்பது பாடசாலை தொடங்குவதற்கு முன்பாகவும், பாடசாலை முடிவடைந்த பின்னரும் மாணவர்களைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பராமரிக்கும் இடமாகும். இதன் மூலம், வேலை காரணமாகத் தாமதமாக வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்கும் பெற்றோர்களுக்குப் பாடசாலைக் கட்டமைப்பின் மூலம் உதவ முடிகிறது. இச்சேவைக்குக் கட்டணம் அறவிடப்படுகிறது என்பதும், இப்பராமரிப்பு நிலையத்தில் பிள்ளைகளுக்கு விளையாட்டு, கவின்கலைகள், கைப்பணி போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பு கிட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் அனைத்துப் பாடசாலைகளிலும் இத்தகைய ஏற்பாடு அமைக்கப் பட்டுள்ளது. 6 வயது தொடக்கம் 9 வயது வரையான மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக