செவ்வாய், மார்ச் 22, 2011

நாடுகாண் பயணம் - பெர்முடா

நாட்டின் பெயர்:
பெர்முடா(Bermuda)

வேறு பெயர்கள்:
பெர்முடாஸ்/சொமேர்ஸ் தீவுகள்(Bermudas/Somers Islands)


அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம் 


எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் அத்திலாந்திக் சமுத்திரம். இருப்பினும் வடமேற்குப் பக்கத்தில் சுமார் 1030 கிலோமீட்டர்கள் தொலைவில் அமெரிக்காவின் வட.கரோலினா மாநிலமும்(North Carolina) வடக்குப் பக்கத்தில் சுமார் 853 கிலோமீட்டர்கள் தொலைவில் கனடாவின் நோவா ஸ்கொட்டியாவும்(Nova Scotia) தெற்குப் புறமாக சுமார் 1770 கிலோமீட்டர்கள் தொலைவில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலமும் அமைந்துள்ளன.


தலைநகரம்:
சென்.ஜோர்ஜஸ் (St.Georg's)


அலுவலக மொழி:
ஆங்கிலம் 

ஏனைய மொழிகள்:
போர்த்துக்கேய மொழி

கல்வியறிவு:
98 % 
File:Bermudian-dollars-$50.jpg
பெர்முடியன் டாலரில் இங்கிலாந்து அரசியின் படம்

இனங்கள்:
ஆபிரிக்கக் கரீபியர்கள்:54,8 %
ஐரோப்பியர்கள்:34.1 %
கலப்பு இனங்கள்:6,4 %
ஏனையோர்:0,4 %

சமயங்கள்:
அங்கிலிக்கன் கிறீஸ்தவம்,ரோமன் கத்தோலிக்கம்,ஆபிரிக்க மெதடிஸ்ட்,புரட்டஸ்தாந்துகள்,நாத்தீகர்.

ஆட்சிமுறை:
பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசம்.

முடிக்குரிய அரசி:
மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)

ஆளுநர்:
சர்.ரிச்சர்ட் கோஸ்னி(Sir.Richard Gozney)

தலைமை அமைச்சர்:
பவுலா கோக்ஸ்(Paula Cox)

பரப்பளவு:
53,2 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
67,837(2009 மதிப்பீடு)

ஆயுட்காலம்:
ஆண்கள்:77.4 வருடங்கள் 
பெண்கள்:83.9 வருடங்கள் 

நாணயம்:
பெர்முடியன் டாலர்(BMD)

இணையத்தளக் குறியீடு:
.bm

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-441

கனிய வளங்கள்:
குறிப்பிடும் படியாக ஏதுமில்லை.

விவசாய உற்பத்திகள்:
வாழைப்பழம், தோடம்பழம்(ஆரஞ்சு), காய்கறிகள், பால், தேன்.

தொழிற் துறைகள்:
சர்வதேச வர்த்தகம், சுற்றுலாத்துறை, சிறு தொழிற்சாலை உற்பத்திகள், மருத்துவப் பொருட்கள் உற்பத்தி.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • உலகில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.இருப்பினும் இந்நாட்டில் 19 %மான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • உலகில் வங்கித் துறையினால் அதிக வருமானத்தைச் சம்பாதிக்கும் நாடு.
  • ஒரு நாட்டிற்குரிய சகல அம்சங்களும்(அமைச்சரவை உட்பட) இருப்பினும் பிரித்தானியாவின் கடல்கடந்த பிரதேசம் என்பதால் இந்நாட்டிற்கு ஐ.நாவில் அங்கத்துவமோ, ஆசனமோ கிடையாது.
  • ஒரு சுதந்திர நாடாக செயற்படுவதற்கு அனுமதி உள்ளபோதும், "அமெரிக்கா போன்ற வல்லரசுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்தக் கூடாது" என்ற 'கட்டுப்பாடு' பிரித்தானியாவினால் விதிக்கப் பட்டுள்ளது.
  • இந்நாடு தனது 'கடல் கடந்த பிரதேசம்' என்ற விடயத்தை பிரித்தானியா பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளது.  









1 கருத்து:

Mathan Denmark சொன்னது…

Good

கருத்துரையிடுக