செவ்வாய், ஜூலை 19, 2011

நாடுகாண் பயணம் - சிலி

நாட்டின் பெயர்:
சிலி (Chile)

அமைவிடம்:
தென் அமெரிக்கா

வேறு பெயர்கள்:
சிலி குடியரசு

எல்லைகள்:
கிழக்கு - ஆர்ஜென்டீனா மற்றும் அண்டீஸ் மலைத் தொடர்.
மேற்கு - பசுபிக் சமுத்திரம்
வடக்கு - பெரு
வடகிழக்கு - பொலிவியா

தலைநகரம்:
சான்டியாகோ (Santiago)

அலுவலக மொழி:
ஸ்பானிஷ்

ஏனைய மொழிகள்:
கிராமங்களில் பண்டைக்கால மொழிகள் பேசப்படுகின்றன, மிகச் சிறிய தொகை மக்கள் 'ஜெர்மன்', பிரெஞ்சு மொழிகளைப் பேசுகின்றனர். அண்மைக் காலத்தில் ஆங்கில மொழியைக் கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கல்வியறிவு:
95.7 %


ஆயுட்காலம்:
ஆண்கள் 74.4 வருடங்கள்
பெண்கள் 81.1 வருடங்கள்

சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 70 %
புரட்டஸ்தாந்துகள் 15.1 %
சமயம் சாராதோர் 8.3 %
ஏனையோர் 4.4 %
மோர்மன் 3.3 %
ஜெகோவாவின் சாட்சிகள் 1.0 %

அரசாங்க முறை:
ஜனாதிபதியின் தலைமையிலான கூட்டாட்சி.

ஜனாதிபதி:
செபஸ்டியான் பினேரா (Sebastian Pinera RN) *இது19.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

ஸ்பெயின் நாட்டிடமிருந்து சுதந்திரம்:
25.04.1844

பரப்பளவு:
756,950 சதுர கிலோ மீட்டர்கள்.


சனத்தொகை:
17,224,200 (2011 மதிப்பீடு)


நாணயம்:
பெசோ (Peso / CLP )


இணையத் தளக் குறியீடு:
.cl


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-56


இயற்கை வளங்கள்:
செப்பு, மரம், இரும்பு, ஈயம், நைத்திரேட்டுக்கள், விலையுயர்ந்த உலோகங்கள், பொலிபெட்னம், நீர் மின்சாரம்.


விவசாய உற்பத்திகள்:
திராட்சை, ஆப்பிள், பியர்ஸ், வெங்காயம், கோதுமை, சோளம், ஓட்ஸ், புளிப்பான பழங்கள், கறிக் கற்றாழை(Asparagus), அவரை, மாட்டிறைச்சி, கோழியிறைச்சி, கோழி முட்டை, கம்பளி, மீன்.


தொழிற்சாலை உற்பத்திகள்:
தகரம், செப்பு, லித்தியம், இரும்பு, உருக்கு, மரம், மரத் தளபாடங்கள், சீமெந்து, துணிவகை, வாகன உதிரிப்பாகங்கள், மீன் பதனிடுதல், உணவுப் பொருட்கள்.


ஏற்றுமதிகள்:
செப்பு, தகரம், பழங்கள், மீன் உணவுகள், காகிதம், காகித அட்டை, இரசாயனப்பொருட்கள், ஒயின்(திராட்சை இரசம்)


நாட்டைப்பற்றிய சிறு குறிப்புகள்:
  • அகலம் குறைந்த, நீளமான நாடுகளில் ஒன்று.
  • உலகின் மிகவும் வரட்சியான பாலைவனமாகிய அட்டகாமா (Atacama) பாலைவனம் இந்நாட்டிலேயே உள்ளது.
  • மேற்படி பாலைவனப் பகுதியிலிருந்தே அதிக அளவு செப்பு அகழ்ந்தெடுக்கப் படுகிறது(ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பதை உணர்ந்து கொள்வோம்)
  • நாடு வரண்ட பாலை வனத்தைக் கொண்டிருப்பினும் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் காடுகளையும், பச்சைப் புல்வெளிகளையும், ஏரிகளையும், எரிமலைகளையும் கொண்டுள்ளது.
  • உலகில் மனித நாகரிகம் உருவானபோது வாழ்ந்த இன்கா இன மக்களே இந்நாட்டின் ஆதிக் குடிகளாவர்.
  • முதன் முதலில் கடல் மூலமாக உலகைச் சுற்றி வந்த போர்த்துக்கேயக் கடலோடியான பேர்டினண்ட் மகலன்(Ferdinand Magellan) தென் அமெரிக்காவில் இந்நாட்டிலேயே தரையிறங்கினார். இவ்வாறு அவர் தரையிறங்கிய சம்பவத்தை நினைவு கொள்ளும் முகமாக நாட்டின் தென் பகுதியிலுள்ள குடாக் கடலுக்கு / நீரிணைக்கு மகலன் நீரிணை(Strait of Magellan) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • மேற்படி குடாக்கடல் பகுதியில் தங்கம் அதிகம் காணப்படுவதாகக் கருதப்பட்டதால் இப்பகுதிக்கு உரிமை கோரி ஆர்ஜென்டீனா, சிலி ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் பலத்த இழுபறி நிலை தொடர்ந்தது. இறுதியில் சிலியின் இறைமையை மதித்து ஆர்ஜென்டீனா பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொண்டது.
  • பனாமாக் கால்வாய் வெட்டப்படும் வரை இந்நாட்டின் கடற்பகுதி முக்கியமான கடற்பகுதியாக இருந்து வந்தது.
  • அந்தார்டிக்கா பனிக் கண்டத்தின்மீது தனக்கு உரிமை இருப்பதாக சிலி பல வருடங்கள் போராடி வந்தது. இறுதியில் அந்தார்டிக்கா ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து ஒதுங்கிக் கொண்டது.
  • இந்நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றிலொரு பகுதி 'செப்பு' ஏற்றுமதியின் மூலம் கிடைக்கிறது.
  • நாட்டு மக்களில் 11.5 % பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • சமூக ஏற்றத் தாழ்வுகளும் காணப்படுகிறது. (சிறு தொகையானோர் கோடீஸ்வரர்களாகவும், பெரும் தொகையானோர் பரம ஏழைகளாகவும் உள்ளனர்)
  • பசுபிக் பிராந்தியத்தில் உள்ள எரிமலை வளையத்தில் இந்நாடு உள்ளதால் இதுவரையில் 24 தடவைகள் நில நடுக்கத்தைச் சந்தித்தது. இறுதியாக பிப்ரவரி 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 708 பொதுமக்கள் பலியாயினர்.
  • இந்நாட்டில் 1973 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சியில் சுமார் 3000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • நாடு சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சிக் கவிழ்ப்பு, தீவிரவாதம், அரசியல் குழப்ப நிலை போன்றவற்றைச் சந்தித்தது.
  • தற்போது அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுகிறது.
  • தென் அமெரிக்க நாடுகளில் இந்நாட்டில் லஞ்சம் குறைந்து காணப்படுகிறது.
  • பத்திரிகைச் சுதந்திரம் பாராட்டத்தக்க அளவில் உள்ளது.
  • தற்போது ஓரளவு ஸ்திரமான பொருளாதார நிலை காணப்படுகிறது.
  • இந்நாட்டில் கடந்த வருடம் 5.08.2010 அன்று தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்ததில், 33 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அதன்பின்னர் 69 நாட்கள் கழித்து அவர்கள் மீட்கப் பட்டதை உலகம் முழுவதிலுமிருந்து தொலைக்காட்சியின் வாயிலாக ஒரே நேரத்தில் 10 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். மேற்படி சம்பவம் தொடர்பாக அந்திமாலையில் கடந்த வருடம் 13.10.2010 அன்று  வெளியாகிய செய்தி வாசகர்களின் பார்வைக்காகக் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 



    2 கருத்துகள்:

    vinothiny dk சொன்னது…

    அருமையான தகவல் தொகுப்பு . பாராட்டுக்கள் .தீமையிலும் நன்மை உண்டு ,உண்மை .

    vetha. சொன்னது…

    nalla Thakavl.nanry.

    கருத்துரையிடுக