வெள்ளி, செப்டம்பர் 16, 2011

நல்லதொரு குடும்பம்..,

ஆக்கம்: வினோதினி பத்மநாதன், ஸ்கெயான், டென்மார்க்.

குடும்பத்தில்  மகிழ்ச்சியாக வாழ எளிய வழிமுறைகள் சில     


1.
நேர்மையாய் இருப்பது !  வாழ்க்கையில் மிகவும்  தேவை.அந்த நேர்மை நம்பிக்கையாய் மாறும் போது, வாழ்க்கையும்  இனிமையானதாக மாற ஆரம்பித்து
விடும். மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே உங்கள் துணையிடம் மென்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி போல உங்கள் வார்த்தைகள் அமைந்து விட்டால் ,மன கசப்பிற்கு இடமே இல்லை. இயல்பாகவேஎல்லாவிடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தோழன் அல்லது தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது போல இருவருமே உணர ஆரம்பித்து விடுவீர்கள் .


2. 



நீங்கள் இருவருமே வேலைக்குப் போகின்றவராக இருந்தால் குடும்பத்தினருக்கு  முடிந்தவரை நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அப்படி
சேர்ந்து இருக்கும் போது  சந்தோசமாய் பேசிக் கொள்ளுங்கள். அல்லது ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடி சற்று காலற நடவுங்கள்.

3.          
உங்கள் துணை தொழில் ரீதியாக புதிய துறையில் செல்லும்போது  அதை சந்தோசமான மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்கூட வாழ்வை  சந்தோசமாக்கி விடும்.

4.
கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சிரியுங்கள்.சேர்ந்து நிறையப்
பேசுங்கள்.அதே போல் ஒருவரின் துயரத்தில் மற்றொருவரும் பங்கெடுங்கள். இப்படி செய்யும் போது உங்களை அறியாமலே ஒருவித அன்னியோன்னியம் ஏற்பட்டு விடும் .

5.
ஒருவர் பேசுவதை மற்றொருவர் காது கொடுத்துக் கேளுங்கள். அதே
போல ஏதாவது ஒரு விடயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது  வாக்குவாதம் ஏற்பட்டால் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக சென்று விடுங்கள். ஏனெனில் வீண் வார்த்தைகள் உறவுகளைச் சிதைத்து விடும்.

6.
 உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படாதீர்கள். நீங்களும் கூட சில விடயங்களை விட்டுக்கொடுக்க முன்வாருங்கள். இப்போது உங்களை பற்றிய உங்கள் துணையின் அபிப்பிராயம் உயரும்.

7.        
ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் அனாவசியமாக தலையிடுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள் .அதிக தலையீடு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி விடும் .


8.
குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் போது ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விட்டுவிட்டு பிரச்சனைக்கான தீர்வுகளை தேட முற்படுங்கள். தீர்வுகள் வந்து விட்டால் குடும்பத்தில் அமைதி கிட்டும்.

9.
ஒரு நாளில் ஒரு பொழுதேனும் குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து  உணவருந்துங்கள்.

10.
உங்கள் மனது அதிக உற்சாகமாக இருக்கும் நாட்களில் உதாரணமாக
திருமண நாள், பிறந்தநாள் போன்ற நாட்களில் உங்கள் துணைவரின் அல்லது
துணைவியின் விருப்பத்திற்கு ஏற்ற அன்பளிப்புகளை கொடுங்கள்.. இதை விட
அருமையான சந்தோசம் வேறென்ன இருக்க முடியும்.?


4 கருத்துகள்:

Vetha. Elangathilakam. சொன்னது…

''..உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படாதீர்கள். நீங்களும் கூட சில விடயங்களை விட்டுக்கொடுக்க முன்வாருங்கள்....''

''...ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் அனாவசியமாக தலையிடுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள் ....''
மிக நல்ல கருத்துகள், பின்பற்றுவோர் குடும்பம் நல்ல பல்கலைக் கழகமாகும். வாழ்த்துகள் விநோ!.தொடரட்டும் உமது பணி.

Ramya Swiss சொன்னது…

Super.

Kathir , Sweden சொன்னது…

Well done

பெயரில்லா சொன்னது…

arumaiyana pathivu.....

கருத்துரையிடுக