செவ்வாய், ஜனவரி 24, 2012

நாடுகாண் பயணம் - ஈக்குவடோரியல் கினிய

நாட்டின் பெயர்:
ஈக்குவடோரியல் கினிய(Equatorial Guinea)

வேறு பெயர்கள்:
எக்குவடோரியல் கினி குடியரசு(Republic of Equatorial Guinea) *ஈக்குவடோரியல் கினியா/எக்குவடோரியல் கினி  எனத் தமிழில் உச்சரிப்போரும் உள்ளனர்.

அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா 

எல்லைகள்:
வடக்கில் - கமரூன்  
தெற்கு மற்றும் கிழக்கு  - கபூன் 
மேற்கில் - கினியா வளைகுடா 

தலைநகரம்:
மலபோ(Malabo)

பெரிய நகரம்:
பாட்டா(Bata)

அலுவலக மொழிகள்:
ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்த்துக்கேய மொழி.

அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
வ்பாங்(Fang), புபே(Bube), அன்னோபோனேசே(Annobonese) 


இனங்கள்:
வ்பாங்(Fang) 85,7%
புபி(Bubi) 6,5%
டோவே(Mdowe) 3,6%
அன்னோபொன் 1,6%
புஜேபா 1,1%
ஸ்பானியர்கள் 1,4


சமயங்கள்:
கிறீஸ்தவர் 93%
இஸ்லாமியர் 1%
ஏனையோர்(இயற்கைச் சமயம், பஹாய் உட்பட) 6%

கல்வியறிவு:
87% 
*ஆபிரிக்க நாடுகளில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று.

ஆயுட்காலம்:
ஆண்கள் 61 வருடங்கள் 
பெண்கள் 63 வருடங்கள் 

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான கூட்டாட்சிக் குடியரசு 

ஜனாதிபதி:
தியோடோரோ ஒபியாங் (Teodoro Obiang) *இது 24.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
இக்னாசியோ மிலாம்(Ignacio Milam)*இது 24.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
12.10.1968

பரப்பளவு:
28,050 சதுர கிலோ மீட்டர்கள். 
*பரப்பளவில் சிறிய நாடு என்பதால் உலக நாடுகளின் பரப்பளவு வரிசையில் 144 ஆவது இடத்திலும், ஆபிரிக்காவின் சிறிய நாடுகள் வரிசையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சனத்தொகை:
676,000(2009 மதிப்பீடு) *சனத்தொகை குறைந்த நாடு என்பதால் உலக நாடுகளில் சனத்தொகை அடிப்படையில் 166 இடத்தில் உள்ளது.

நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங்(Central African CFA franc)


இணையத் தளக் குறியீடு:
.gq

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 240

இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, மரம், சிறிய அளவில் தங்கம், மங்கனீஸ், யுரேனியம்.

விவசாய உற்பத்திகள்:
காப்பி, கொக்கோ, அரிசி, கிழங்குவகைகள்(மரவள்ளிக் கிழங்கு உட்பட), வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய்(பாமாயில்), கால்நடைகள், மரங்கள்.

தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, மர அறுவை ஆலைகள்(பலகை தயாரிக்கும் ஆலைகள்)

ஏற்றுமதிகள்:
பெட்ரோலியப் பொருட்கள், மரம்.

வேலை இல்லாத் திண்டாட்டம்:
22%


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் மூன்றாவது சிறிய நாடு.
  • நாட்டு மக்களின் ஆள்வீத மொத்தத் தேசிய வருமானம் அதிகமாக இருப்பினும் சுமாராக 70% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • உலகில் வருடாந்தம் அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் பதிவாகும்  நாடுகளில் ஒன்று.
  • சகாராப் பிராந்தியத்தில் ஊடகச் சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகளில் ஒன்று.
  • இந்நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள Bioko தீவு 15 ஆம் நூற்றாண்டு வரை வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இருந்தது. கொலம்பஸ்சைப் போன்று இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போர்த்துக்கேய மாலுமியாகிய Fernao do Po என்பவர் 1472 ஆம் ஆண்டில் இத் தீவைக் கண்டுபிடித்து இதற்கு Formosa(போர்த்துகேய மொழியில் அழகு என்று பொருள்) பெயரிட்டார்.
  • 1970 ஆம் அண்டு தொடக்கம் 1979 ஆம் ஆண்டு வரை பல உள்நாட்டுப் போர்களையும், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளையும் சந்தித்த நாடு. உள்நாட்டுப் போரில் 80,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
  • ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போலவே ஏழை நாடாக இருந்த இந்நாட்டில் திடீரென 'பெற்றோலியம்' கண்டுபிடிக்கப் பட்டதால் பணக்கார நாடாக மாறியுள்ளது.
  • இந்நாட்டில் மருத்துவப் பட்டப் படிப்பு உட்பட ஏனைய பட்டப் படிப்பை வழங்குகின்ற ஒரேயொரு பல்கலைக் கழகம் உள்ளது.(Univesidad Nacional de Guinea Ecuatorial) இப் பல்கலைக் கழகம் கியூபா நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது என்பதுடன் இப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

6 கருத்துகள்:

Sunthar சொன்னது…

Excellant and Great, Thaks for anthimaali.

vetha (kovaikkavi) சொன்னது…

தலை நகரம் மலபோ ஒரு தீவில் உள்ளதா? அப்படியானால் எவ்வளவு இடைவெளி..!!!

anthimaalai@gmail.com சொன்னது…

நீங்கள் கூறுவது மிகவும் சரியானது. பொதுவாக ஒரு நாடு தனது தலை நகரத்தை ஒரு தீவில் வைத்துக் கொள்வதில்லை. இவர்கள் கொஞ்சம் விதி விலக்கு.அதற்குக் காரணம் இந்த நாட்டைக் கைப்பற்றுவதற்குப் பிரெஞ்சுக் காரர்களுக்கும், போர்த்துக்கேயர்களுக்கும்,ஸ்பானியர்களுக்கும் பல தடவைகள் போர்கள் மூண்டன. இறுதியாக ஸ்பெயின் மேற்படி ஈக்குவடோரியல் கினியவை கைப்பற்றியபோது அதன் அண்டை நாடுகளாகிய கமரூன், கபூன் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரெஞ்சுக் காரர்களால் தாக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்கும் முகமாக ஸ்பானியர்கள் இந்நாட்டின் தலை நகரத்தை மேற்படிBioko(Isla de Bioko) தீவில் உள்ள மலபோ நகரத்திற்கு மாற்றி விட்டார்கள். நாடு சுதந்திரம் அடைந்தும் தலைநகரம் அதே தீவில் தங்கி விட்டது. தீவில் இருக்கும் 'மலபோ' நகரத்திற்கும் பெரு நிலப்பரப்பில் இருக்கும் 'பாட்டா' நகரத்திற்கும் உள்ள தூரம் 234 கிலோ மீட்டர்கள்.'பாட்டா' நகரமும் ஏறத்தாழ தலை நகரத்திற்கு உரிய சகல அம்சங்களையும் கொண்டது. உதாரணமாக துருக்கியின் தலைநகரமாகிய 'அங்காராவும்', அதன் பெரு நிலப்பரப்பில் அமைந்திருக்கும் 'இஸ்தான்புல்' நகரமும் ஒரே அம்சங்களைக் கொண்டவை. வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டும் தங்கள் கேள்விக்கு நன்றி.

Malar சொன்னது…

Very good.

Seelan சொன்னது…

Thanks, for anthimaalai. All tha best.

vetha (kovaikkavi) சொன்னது…

மிக்க நன்றி. பல வேலைகளில் சிலவேளை பதிலைக் கூட பிந்தி வாசிக்க வேண்டிய நிலையும் உருவாகிறது. மிக்க மிக்க நன்றி. (விசித்திரம் தான் நாடு எங்கோ தலை நகரம் எங்கோ என்பது.)

கருத்துரையிடுக