வெள்ளி, மார்ச் 23, 2012

ஆஹா, மெல்ல நட மெல்ல நட ...


சென்ற சனிக்கிழமைக்கும் முந்தைய சனிக்கிழமை காலை ஒரு ஒன்பதரை மணி இருக்கும். மைலாப்பூர் வடக்கு மாடவீதியில் சரவணபவன் அருகில் சாலையைக் கடக்கலாம் என எண்ணி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன். ஒரு வினாடி கும்மிருட்டு. ஒரு ஸ்கூட்டர் என்னை இடித்த வேகத்தில் நான் அப்படியே உட்கார்ந்த வாக்கில் கீழே விழுந்திருப்பது அடுத்த வினாடியில்தான் எனக்குப்புரிந்தது. என் தவறா ஸ்கூட்டர் ஒட்டி வந்த இளைஞனின் தவறா தெரியவில்லை. நான் தடுமாறி எழுந்து நின்றேன். பார்த்து வர வேணாமா? இது அந்த இளைஞனின் கேள்வி. நான் நடக்கலாம் என எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தால் இடது காலை ஊன்றவே முடியவில்லை. வலி என்னைப் பிளந்தது. “பார்த்துப் போங்கஎன்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். நான் நடக்க முடியாமல் திகைத்து நின்றேன். ஒரு பெண் உதவிக்கு வர, ஆட்டோ ஒன்று பிடித்து மிகுந்த சிரமத்தோடு எப்படியோ ஏறிக் கொண்டேன். உடனே என் பெரிய பெண் வித்யாவுடன் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.
அவள் கீழேயே காத்திருந்தாள. ஆட்டோவிலிருந்து இறங்குவது அதை விட சவாலாயிருந்தது. என் பெண் பயந்து விட்டாள் என்னை காம்பவுண்டுக்குள் ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு மாடிக்குப் போனாள். குழந்தைகள் இருவரையும் சர்வன்ட்டின் பொறுப்பில் விட்டு விட்டு பெண்ணும் மருமகனும் கீழே வந்தார்கள். மறுபடியும் கார் ஏறும படலம். மலர் மருத்துவமனையில் எனக்காக ஒரு சக்கர நாற்காலி காத்திருந்தது. எக்ஸ்ரே பெஞ்ச்சில் ஏறிப் படுப்பதற்குள் வலி பிராணன் போயிற்று.
மனசு குருவாயூரப்பனுடன் தர்க்கம் செய்தது. “இடிச்சு கீழ தள்ளியாச்சு. சந்தோஷம்தானே? அதோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன். எலும்பு கிலும்பு ஏதாவது முறிஞ்சிருந்துதோ படவா உன்னை சும்மா விட மாட்டேன். அப்டி எதாவது இருந்தா பாவம் என் பொண்ணு கைக்குழந்தைகளோட என்னையும் எப்டி பார்த்துப்பா? அவளை நீ கஷ்டப் படுத்தப்படாது சொல்லிட்டேன்.
சற்று நேரத்தில் என் பெண் வந்தாள். “அம்மா பிராக்ச்சர் இல்ல. லிகமென்ட் டேர் ஆகியிருக்கு. பெல்விக் போன்ல லேசா கிராக் விட்ருக்கு. தானா சரியாய்டும்னார் டாக்டர்என்றாள் அந்த வரை தலைப்பாகையோடு போயிற்று என்றாலும் வலி பெரும் பிரச்சனையாக இருந்தது. இடது காலை ஊனவே முடியவில்லை என்றால் எப்படி நடப்பது? வாக்கரில் கூட நடப்பது சிரமமாகவே இருந்தது. வலி தெரியாமலிருக்க ஊசியும் மாத்திரைகளும் கொடுத்தார்கள். வீடு வந்தால் அங்கே மாற்றொரு சோதனை. லிப்ட் இயங்கவில்லை. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஆலோசனையே நடந்தது. இறுதியில் சேரில் உட்கார வைத்து தூக்கிச் சென்று விடுவதென்று முடிவாயிற்று.
கார் டிரைவரும் வாச்மேனும் மாடிப்படி வரை தூக்கி வந்து சற்று மூச்சு வாங்குவதற்கு நிற்க என் வில் பவர் விழித்துக் கொண்டது.
“நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிரித்தார்கள். முடிந்தால் ஏறு என்றாள் பெண். கீழ்ப் படியில் மேலும் 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மிக நல்ல, சாதக நினைவுடனான (positive thinking) அனுபவம். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

கருத்துரையிடுக