செவ்வாய், மார்ச் 06, 2012

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


எடையை குறையுங்கள் உடற்பயிற்ச்சி செய்யுங்கள் புகைக்காதீர்கள் கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள் நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள் டென்ஷன் அடையாதீர்கள்ஸ என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் ஞஈஞ எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் ஞஈஞ எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் ஞஈஞ உள்ள சோளம் பார்லி ஓட்ஸ் தவிடு நீக்காத கோதுமை மாவு முளைவிட்ட தானியங்கள் அவாகோடா பழம் கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை) கீரைகள் சூரியகாந்தி விதைகள் தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்) ஆலிவ் எண்ணெய் கடுகு கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி. போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு கீரைகள் பச்சைக்காய்கறிகள் முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால்இ இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான ஞஒமேகா 3ஞ வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல் ஞஒமேகா 3ஞ தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இருமுறை சால்மன் புளூபிஷ் மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு ப்ளாக்ஸ் ஆயில் சோயா மொச்சை ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் மேலும்

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

payanulla thakavalkal..vaalththukkal

கருத்துரையிடுக