செவ்வாய், ஏப்ரல் 10, 2012

விளக்கெண்ணெய் கெட்ட வார்த்தையா?

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
நேற்றைய தினம் (09.04.2012) உங்கள் அந்திமாலையில் வெளியாகிய சகோதரி வினோ ரூபி அவர்கள் எழுதிய "பாதங்கள் அழகாக இருக்க" என்ற தலைப்பிலான மருத்துவ/அழகுக் குறிப்பினை வாசித்திருப்பீர்கள். மேற்படி குறிப்பினை வாசித்த சகோதரி தர்மினி அவர்கள் விளக்கெண்ணை என்றால் என்ன? அதன் மூலப் பொருள் என்ன என்று கேட்டிருந்தார். இலங்கையில் ஆமணக்கு எண்ணெய் என அழைக்கப் படுவதால் விளக்கெண்ணை எனும் பெயரைக் கேள்வியுற்றதும் பெரும்பாலான இலங்கைத் தமிழ் வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதே போல் தமிழகத்தில் சில பகுதிகளில் ஒருவரைத் திட்டும்போது 'விளக்கெண்ணை' எனும் வார்த்தை உபயோகிக்கப் படுவதால் 'ஆமணக்கு எண்ணையின் பெயர்தான் விளக்கு எண்ணெய் என அறியாத தமிழக வாசகர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவுகிறது. இத்தகைய இரு சாராரும் படித்துப் பயன்பெறும் விதத்தில் நண்பர் பிரபா அவர்களின் வலைப்பதிவாகிய 'ஆழ்கடல் களஞ்சியத்தில் வெளியாகிய விளக்கெண்ணெய் சம்பந்தமான தகவல்களை இணைத்துள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள்.
ஆசிரியர்
அந்திமாலை 
www.anthimaalai.dk

ஆழ்கடல் களஞ்சியத்தை வாசிக்க இங்கே அழுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக