ஞாயிறு, ஜூன் 24, 2012

ஐரோப்பா பயண அனுபவங்கள்


ரு காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்களைக் கண்களை மலர்த்தி நான் பார்ப்பதுண்டு. வெளிநாடு சென்று வருவது என்பது ஏதோ முற்பிறவியில் செய்த அதிர்ஷடம் என நான் நினைப்பேன். சாவதற்குள் ஒரு முறையேனும் கடல் கடந்து சென்று வெளிநாடுகளைக் கண்டுவந்து விடவேண்டும் என்ற தணியாத ஆவல் எனக்கிருந்தது.  ஆனால் இக்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அயல்நாடுகளுக்குப் பயணம் என்பது நம் கிராமங்களிலுள்ள படிப்பறிவில்லாக் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூடதற்போது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது.

என் மகன் பிரான்சில் அப்போது மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்ததால்அவனது அழைப்பை ஏற்று 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள் என் கணவருடன் ஐரோப்பா சென்று வந்தேன். 1950 களில் பாரீஸில் வேலையிலிருந்த என் தந்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாரீஸைத் திரும்பவும் பார்க்க விருப்பப்பட்டு எங்க்ளுடன் பயணத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ்,இங்கிலாந்துஇத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் சென்று வந்தோம்.

ஐரோப்பா யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குச் செல்ல ஷென்கன் விசா (schengen visa) வாங்கவேண்டும். ஆனால் அதே யூனியனின் அங்கத்தினர்களான இங்கிலாந்துசுவிட்சர்லாந்து நாடுகளுக்குச் செல்ல அப்போது தனி விசா வாங்க வேண்டும்.(இப்போது ஏதும் மாறியிருக்கிறதா எனத் தெரியவில்லை) பிரான்சின் தூதரகம் புதுச்சேரியிலேயே இருப்பதால் பிரான்ஸ் விசா வாங்குவதில்எங்களுக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. விசாவிற்கான விண்ணப்பப் படிவமும் எளிமையாகத் தான் இருந்தது. விண்ணப்பம் கொடுத்த ஐந்து நாட்களுக்குள் எங்களுக்கு ஷென்கன் விசா கிடைத்து விட்டது.

அதற்குப் பிறகு தான் இங்கிலாந்து விசாவிற்கு விண்ணப்பித்தோம். அடேயப்பா! படிவத்தின் பத்துப் பனிரெண்டு பக்கங்களைப் பூர்த்தி செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு நாட்கள் லண்டன் போய்ச் சுற்றிப் பார்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தோம்.

'எங்கெங்கு பயணம் செய்யப்போகிறீர்கள்எங்குத் தங்கப்போகிறீர்கள்அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் முகவரிஉறவினர் வீடு என்றால் அவரது பெயர் மற்றும் முகவரி?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டார்கள் கேள்வியின் நாயகர்கள்!

அதில் வரும் இன்னும் சில கேள்விகளைப் பாருங்கள்:-

'எப்போதாவது போர்க்குற்றம்மனித குலத்துக்கெதிரானப் போராட்டம்,இனப்படுகொலை (war crimes, war against humanity, genocide) போன்ற நடவடிக்கைகளில் பங்கு கொண்டவராயிருந்தால் அது பற்றிய விபரங்கள்?

எந்த நாட்டிலாவது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுண்டாதீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்த துண்டாஆம் எனில் அதன் விபரம்?'

எனக்கு ஒரு சந்தேகம். எந்தத் தீவிரவாதியாவது முறையாகப் பாஸ்போர்ட்விசா வாங்கிப் பயணம் செய்வானா?  அப்படியே செய்தாலும் இந்தக் கேள்விகளுக்கு 'ஆம் நான் ஒரு தீவிரவாதி தான் இந்தந்த நாடுகளில் நான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வானா?'

சென்னையில் விசா விண்ணப்பப் படிவம் கொடுத்த போது கைரேகைகண்கள் முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டார்கள். எல்லாவற்றையும் கொடுத்து மூன்று வாரங்களாகியும் விசா கிடைத்தபாடில்லை. கடைசி நேரத்தில்டென்ஷன் அதிகமானதுடன் நாங்கள் பதிவு செய்திருந்த விமானத்தை மேற்கொண்டு பணம் கொடுத்து ஒருவாரத்திற்கப்புறம் மாற்ற வேண்டியதாய்ப் போய் விட்டது. கடைசியில் வெறுத்துப்போய் மேலும் 

1 கருத்து:

Balan சொன்னது…

Very good, folling like this story.

கருத்துரையிடுக