வெள்ளி, அக்டோபர் 05, 2012

புரட்டாதி மாத சிறப்புகள்


தனங்களையும் தானியங்களையும் அளிக்கக்கூடியது வர்ஷ ரிது. ஆறு ரிதுக்களில் முக்கியமான இந்த ரிதுவும் புரட்டாதி மாதத்தில்தான் வருகிறது. இம்மாதத்தில் விரதம் இருப்பது மிகச்சிறப்பு.


  • வேங்கடவனுக்குப் புரட்டாதியில்தான் பிரம்மோத்ஸவம். புனிதமான புரட்டாதி சனிக்கிழமைகளில் நெற்றியில் திருமண் இட்டு, திருமாலை வேண்டியபடியே, திருமாலுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம்.

  • திருவேங்கடமுடையானின் திருநட்சத்திரம் – திருவோணம். மற்ற மாதங்களின் திருவோணத்தைவிட, புரட்டாதி திருவோணத்துக்கு முக்கியத்துவம் அதிகம். இந்நாளில்தானே தொண்டைமான் மன்னனுக்கு பெருமாள் காட்சியளித்தார்!

  • சனிக்கிழமை விரதத்தோடு, திருவோண நாளிலும் வீட்டிலேயே பெருமாள் விக்கிரகம் அல்லது படத்துக்கு சந்தன- குங்குமம் இட்டு, அட்சதை தூவி, நைவேத்தியம் படைத்து வழிபடலாம். வாய்ப்பிருந்தால் மாவிளக்கேற்றியும் வழிபடலாம்.

  • புரட்டாதி மகாளய அமாவாசையும் மகத்துவம் பெற்றது. முன்னோர்களை வழிபட வேண்டிய நாள்.

  • கருடாழ்வாரை வணங்குவதும் புரட்டாதியில் முக்கியத்துவம் பெறுகிறது. கல்வியும் ஞானமும் அருளப்படும்.

  • அமாவாசை அன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, தயிர்சாத நைவேத்தியம் செய்து வழிபடலாம். எளியவர்களுக்கு ஆடை தானம் செய்யலாம்.
நன்றி: Aambal.co.uk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக