சனி, அக்டோபர் 06, 2012

புனித நாள் புரட்டாதி சனி!

சனிக்கிழமை விரதம் பொதுவாகவே பலருக்கு வழக்கம்தான். இருப்பினும் புரட்டாதி சனிக்கிழமைக்கு சிறப்பு உண்டு. அன்றுதானே சனிபகவான் அவதரித்தார். அதனால், சனிபகவானால் ஏற்படும் தீய பலன்கள் ஏற்படாது என்பதால் காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கமானது.
புரட்டாதியில் திருப்பதி சென்று வழிபடுவது வழக்கம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கி பலன் பெறலாம்! திருப்பதி திருமலையே மிகப்பெரிய பெருமாள் கோயில். முன்னொரு காலத்தில் அங்கு பீமன் என்ற பக்தர் சனிக்கிழமை விரதம் இருப்பதாக உறுதி பூண்டார். வறுமை காரணமாக சனிக்கிழமைகளில் கோயில் செல்லவே நேரம் இல்லாமால் எந்நேரமும் மண்பாண்டத் தொழிலிலேயே கவனம் செலுத்த வேண்டிவந்தது. எப்போதாவது கோயில் சென்றாலும், ‘பெருமாளே நீயே எல்லாம்’ என்று மட்டும் சொல்லி வணங்கி வருவார்.
Thirunallar Nala Theertham
நளனுக்கு சனீஸ்வரனின் பார்வை நீங்கி அவரது தோற்றம் மீளப்பெற அவர் நீராடிய திருநள்ளாறு தீர்த்தம். இதனால் இதை “நள தீர்த்தம்”என்றும் அழைப்பர். சனிப்பார்வை உடையவர்கள் இதில் நீராடுவது உத்தமம்.
ஒருநாள் பெருமாளைத் தரிசிக்க போகவே முடியவே இல்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்து விடும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனே மண்பாண்டக் களிமண்ணால் பெருமாள் சிலையைச் செய்தார்.கையில் காசில்லாததால் மண்ணிலேயே பூமாலை உருவாக்கி வணங்கினார். அப்பகுதியை ஆண்ட மன்னன் தொண்டைமானும் பெருமாள் பக்தரே. அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூவில் மாலை செய்து பெருமாளுக்கு அணிவிப்பார். அணிவித்துவிட்டு, மறு சனிக்கிழமை வந்தார். பெருமாளின் கழுத்திலோ மண்ணினால் செய்த பூமாலை தொங்கியது. கோயிலில் உள்ளோர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என எண்ணினார்.
அன்று மன்னனின் கனவில் பெருமாள் தோன்றினார். பீமனின் பக்தியை மெச்சினார். மகிழ்ந்த அரசர், பீமனின் வீட்டுக்குச் சென்ற மன்னன் பொன்னும் பொருளும் அளித்தார். அவற்றைக் கண்டு மயங்காமல், இறுதிவரை பெருமாள் பணியே செய்து வந்தார் பீமன். இறுதியில் வைகுண்டத்தை அடைந்தார்.
பெருமாளின் ஆணைப்படி, பீமனைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
புரட்டாதி சனி விரதம் மிக எளிமையானது. மூன்று வேளையும் துளசியும் தண்ணீரும் குடித்து விரதமிருக்க வேண்டும். எள் பொட்டலத்தை பாவ மூட்டையாக்க கருதி, அதை நல்லெண்ணெயில் மூழ்கடித்து, சனீஸ்வரனின் கோபப்பார்வை முன் வைத்துவிட்டால் அது எரிந்து போகும். சனீஸ்வரரையும் வணங்க வேண்டும்.
திருநள்ளாறு திருத்தலம் 
திருநள்ளாறு திருத்தலம் சனிப்பார்வை நீங்கவும், நவக்கிரக தோசங்கள் 
நீங்கவும் தரிசிக்கப்பட வேண்டிய ஒரு திருத்தலம். இங்கேதான் நள தீர்த்தமும் உள்ளது.

வேத வியாசரின் சீடர் ஆத்ரேய திருவல்லிக்கேணி வந்தபோது, வேத வியாசர் ஆராதித்த அழகான கிருஷ்ண விக்ரகத்தையும் எடுத்து வந்தார். அதன் வலது கரத்தில் சங்கும், இடது கரத்தில் வைகுண்ட ஹஸ்தமாகவும் இருந்தது. இந்த விக்ரஹத்தை சுமதி மஹரிஷியும் ஆத்ரேய மஹரிஷியும் பிரதிஷ்டை செய்தனர். இப்பெருமானின் வலதுபுறம் ருக்மணி, இடப்புறம் சாத்யகியுடன் மற்றும் கண்ணனின் பிள்ளை, பேரன் என்று குடும்பத்துடன் பிரதிஷ்டை செய்தார்கள். கண்ணபிரானின் தென்புறத்தில் பலராமர்.

பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு மன்னன், திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கச் சென்றார். அப்போது பெருமாள் ‘நான் திருப்பதியானாகவே திருவல்லிக்கேணியிலும் காட்சியளிக்கிறேன்’ கூறினார். மன்னர் திருவல்லிக்கேணி வந்து பார்த்தபோதும் திருப்பதி பெருமாளாகவே காட்சியளித்தார். அத்னால் திருவல்லிக்கேணியும் திருப்பதிக்கு இணையாகவே கருதப்பட்டு, ‘இரண்டாவது திருப்பதி’ என்று அழைக்கப்படுகிறது.

நன்றி: Aambal.co.uk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக