செவ்வாய், ஜூன் 18, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

16. ஒருவன் உயர் குலத்தவன் ஆவது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? படிப்பினாலா?
குலமும், படிப்பும் ஒருவனை உயர் குலத்தவன் எனும் நிலைக்குக் கொண்டு செல்லாது. ஒருவன் உயர்ந்தவன் ஆவதற்குக் காரணமே அவனது ஒழுக்கம்தான். ஒழுக்கத்தில் குறைவு பட்டவன் உயர்ந்தவன் ஆகமாட்டான். எவ்வளவு படித்தவன் ஆனாலும் கெட்ட பழக்க வழக்கங்களில் சிக்கியவன் உயர்ந்தவன் ஆகமாட்டான். நான்கு வேதங்களை ஓதுகின்ற பிராமணனாக இருந்தாலும் கெட்ட நடத்தையுடையவன் இழிகுலத்தவன் ஆவான்.

17. உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
 நாள்தோறும் பிராணிகளின் உயிர்கள் யமனின் வீட்டிற்குப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்தும், மிஞ்சி உள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருப்போம் என்று நம்புவதும், ஆசைப்படுவதுமே உலகின் மிகப் பெரிய ஆச்சரியம்.

18. எவன் உலகம் முழுவதையும் வெல்வான்?
தன்னைச் சூழ்ந்திருக்கின்ற மற்றும் தன் அயலவர்களின் நிந்தனைச் சொற்களை எவன் பொறுத்துக் கொள்கிறானோ அவன் இந்த உலகம் முழுவதையும் வெல்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக