வியாழன், ஜூலை 24, 2014

கவர்ச்சியான உடல் அழகைப் பெற...

  • ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து கடலை மாவை உபயோகித்து முகம் கழுவ வேண்டும்.
  • சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
  • மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.
  • பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.
  • அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.
  • வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.
  • வைட்டமின் `ஏ` மற்றும் `சி` அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.
  • கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.
  •  பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய்யலாம்.
  •  வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
  • கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.
  • ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.
  • உடலில் `புளோரின்` பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் `புளோரின்` சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆட்டுப் பால், வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேன்டும்.
  • சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது `சிலிக்கான்` பற்றாக் குறையின் அறி குறியாகும். பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.
  • `குளோரோபில்` பற்றாக்குறையால் தோல் உறியும். இதைத் தடுக்க கோதுமை மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.
  • நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும். 
நன்றி: மாலைமலர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
அருமையான அழகுக்குறிப்பு பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக